ரஜினி சொன்ன சமூக விரோதிகள் இவர்தானோ?

ஜூன் 08, 2018 673

சென்னை (08 ஜூன் 2018): தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று ரஜினி சொன்னது காலா படத்தின் பாதிப்புதானோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் 22ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ரஜினி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், போராட்டத்தில் கலவரம் வெடிக்க சமூக விரோதிகளே காரணம் என குற்றஞ்சாட்டினார். ரஜினியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது இப்படியிருக்க காலா படம் நேற்று வெளியாகி இருவேறு விமர்சனங்களை கொண்டுள்ளது. குறிப்பாக அதில் போராட்டங்கள் போன்ற காட்சிகள் இருப்பதும், நிஜத்தில் ரஜினி போராட்டங்களை எதிர்ப்பதும். காலாவை வைத்துத்தான் ரஜினி தனது கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...