குண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து இருவர் காயம்!

ஜூன் 10, 2018 681

மதுரை (10 ஜூன் 2018): மதுரை அருகே குண்டு தயாரித்த முனியசாமி, நரசிம்மன் என்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துறை அருகே உள்ள வாழைத்தோப்பில் ஒரு வீட்டில் வெடிகுண்டு தயாரித்துள்ளனர். அப்போது குண்டு வெடித்ததில் நரசிம்மன், முனியசாமி ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போலீசார் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...