தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மீது கொலை வெறி தாக்குதல்!

ஜூன் 11, 2018

தஞ்சை (11 ஜூன் 2018): தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது தஞ்சையில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று(10-06-2018) தஞ்சையிலிருந்து சென்னை வருவதற்காக பெ.மணியரசன் தனது உதவியாளருடன் ரயில் நிலையத்துக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். இரவு சுமார் 8.30 மணியளவில் எதிரே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளித் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

படுகாயங்களுடன் பெ.மணியரசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது தாக்குதலின் பின்னணியில் பாசிச சக்திகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப் படுகிறது,.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!