சென்னையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு வன்புணர்வு!

ஜூன் 11, 2018 1217

சென்னை (11 ஜூன் 2018): சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருள் கொடுத்து கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவருடன் பழகி வந்த இளைஞர்கள், அவருக்கு மது, கஞ்சா கொடுத்து அந்த இளைஞர்கள் பழக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியை திருவள்ளூருக்கு அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றனர். அங்கு ஓரிடத்தில் அடைத்து வைத்து சிறுமியை 7 இளைஞர்கள் தொடர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் போதை பொருட்களுக்கு அடிமையானது தெரிய வந்தது. மேலும் . சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஏழுபேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான வாலிபர்கள் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்டவர்கள் என்றுப் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...