மேலும் 68 சிறைக் கைதிகள் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு!

June 12, 2018

சென்னை (12 ஜூன் 2018): எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் முதல் கட்டமாக கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை புழல் சிறையிலிருந்து 44 ஆண்கைதிகள் 8 பெண்கைதிகள் என 52 பேர் விடுவிக்கப்படுகின்றனர். திருச்சி சிறையிலிருந்து 10 பேரும், சேலத்திலிருந்து 4 பேரும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து 2 கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Search!