நீதிபதிகளின் தீர்ப்பு மக்களுக்கு பெரும் ஆபத்து: ஸ்டாலின்!

ஜூன் 15, 2018 555

சென்னை (15 ஜூன் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த நீதிபதிகளின் தீர்ப்பு பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது, நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ’’இருவேறு மாறுபட்ட கருத்துகள் வந்துள்ளதால், தற்போது ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால், மக்களுக்கு பெரும் ஆபத்து’’என்று பதிலளித்தார்.

மேலும் தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...