புத்தக விலை திடீர் உயர்வு - மாணவர்கள் பாதிப்பு!

ஜூன் 15, 2018 477

சென்னை (15 ஜூன் 2018): புத்தக விலை உயர்வால் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

புதிய பாடதிட்டத்தின் படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிப் பாட புத்தகங்கள் கடந்த 11-ம் தேதி முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் இந்த பாட புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். பாட புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட புத்தகம், இந்த ஆண்டு 1590 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை அதிகமாக உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் நலச்சங்க தலைவர் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக புத்தகங்களின் விலையை அரசு குறைக்க வேண்டும் அல்லது அரசு பள்ளிகளை போலவே தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...