புனேவில் ஒரு வயது தமிழக குழந்தை வன்புணர்ந்து கொலை!

ஜூன் 16, 2018 629

புனே (16 ஜூன் 2018): புனேவில் ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் தமிழகத்தை சேர்ந்த சிலர் லோனி கல்போர் என்னும் இடத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு வேலை செய்யும் கட்டத்திற்கு அருகே படுத்து உறங்கிக்கொண்டிருந்த போது, பக்கத்தில் படுத்திருந்த குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ளி கிழமை அதிகாலையில் குழந்தை அருகேயுள்ள பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை வன்புணர்வு செய்யப் பட்டு தரையில் அடித்துக் கொலை செய்யப் பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவதினத்தன்று இளைஞர் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வது சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட நபர், மல்ஹாரி பான்சோடே என்பவன்தான் அந்த இளைனன் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான். இதனை அடுத்து போலீசார் அவன் மீது பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...