ரஜினி மீது சிலம்பரசன் என்பவர் புகார்!

ஜூன் 16, 2018 627

ஓசூர் (16 ஜூன் 2018) தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக ரஜினி மீது சிலம்பரசன் ஏன்பவர் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆல்லைக்கு எதிரான போராத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப் பட்டனர். பல காயம் அடைந்தன்ன. இந்நிலையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களையும் அங்கு சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் யாவும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி இருந்தது.

இந்நிலையில் ஓசூர் சென்னத்தூர் விஓசி நகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் போலீசில் ரஜினி மீது புகார் அளித்துள்ளார். அதில்ம், "நடிகர் ரஜினி, பொய்யான கருத்தை பரப்பி போராடினால் உயிர்பலி ஆகிவிடும் என எதிர்மறையாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார். போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் எனக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி கலவரம் தொடர்பாக எதிர்மறையான கருத்தை தெரிவித்த நடிகர் ரஜினி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...