ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு? - அதிகாரிகள் திடீர் ஆய்வு!

ஜூன் 17, 2018 685

தூத்துக்குடி (17 ஜூன் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுகிறதா? என்பது குறித்து அரசு அதிகாரிகள் குழு இன்று திடீரென ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார் ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...