மன்சூர் அலிகானை தொடர்ந்து பியூஷ் மானுஷ் கைது!

ஜூன் 18, 2018 639

சேலம் (18 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகானை தொடர்ந்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டுள்ளார்.

பியூஷ் மானுஷ் மீது அரசுக்கு எதிராக பேசுதல், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தும்பிபாடி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் சென்னையில் அவரது வீட்டில் வைது கைது செய்தனர், பின்பு அவர்ஃபை சேலம் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட வழக்கில் பியூஸ் மானூஷூம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கூட்டங்களை நடத்திய நிலையில் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...