முத்துப்பேட்டையில் பாஜகவினர் கைது!

ஜூன் 20, 2018 849

திருவாரூர் (20 ஜூன் 2018): முத்துப்பேட்டையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டையில் ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பங்கேற்கும் உண்ணாவிரதத்திற்கு பாஜகவினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் கைது செய்துள்ளனர். உண்ணாவிரதம் அறிவித்த பகுதிகளுக்கு வந்த சில பாஜகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க 200க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...