துபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் காலாவதியான உணவு!

ஜூன் 23, 2018 1005

திருச்சி (23 ஜூன் 2018): துபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கு காலாவதியான உணவு வழங்கப் பட்டதை அடுத்து பயணி துபை முனிசிபாலிட்டியில் புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சபீர். கடந்த 18 ஆம் தேதி துபையிலிருந்து எர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமானத்தில் அவருக்கு வழங்கப் பட்ட உணவின் தேதியை பார்த்தபோது அது காலாவதியாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சபீர் இதுகுறித்து விமான ஊழியர்களிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் அதுகுறித்து அவர்கள் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் காலாவதியான உணவு பாக்கெட் மற்றும் அதன் லேபிள் மற்றும் போர்டிங் பாஸ் மற்றும் இதர ஆவணங்களுடன் துபை முனிசிபாலிட்டியில் புகார் அளித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள துபை முனிசிபாலிட்டி விரைவில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...