திமுகவினர் 192 பேர் சேலம் சிறையில் அடைப்பு!

ஜூன் 23, 2018 489

சேலம் (23 ஜூன் 2018): தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சேலம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

சேலம்- சென்னை இடையே ரூ. 10 ஆயிரம் கோடியில் 277 கி.மீ., தொலைவிற்கு 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துகிறது. தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கிராம மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...