காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு!

June 23, 2018

புதுடெல்லி (23 ஜுன் 2018): மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைத்துள்ளது.

கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் இந்த குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தமிழகம் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கர்நாடக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இதற்கிடையே நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!