சிறையில் மன்சூர் அலிகான் உண்ணா விரதம்!

ஜூன் 23, 2018 578

சேலம் (23 ஜூன் 2018): ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில் சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணா விரதம் மேற் கொண்டுள்ளார்.

சேலத்தில் மன்சூர் அலிகான் சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மத்திய, மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. என்று பேசினார்.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக பியூஸ் மனுஷ் ஜாமீன் மனுவை ஏற்று நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்ட நிலையில் மன்சூர் அலிகான் ஜாமீன் மறுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...