குற்றாலத்தில் அடாவடி வசூல்!

ஜூன் 23, 2018 509

குற்றாலம் (23 ஜூன் 208): பழைய குற்றாலம் கார் பார்க்கிங்கில் அடாவடி வசூலால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏழைகளின் காஷ்மீர் என வர்ணிக்கப்படும் குற்றாலத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர் அது மட்டுமல்லாது சபரிமலை சீசன் வரை பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். தற்போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் பழைய குற்றாலம் கார் பார்க்கிங்கில் அடாவடி வசூல் நடப்பது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் பயணிகளுக்கும் கட்டணம் வசூலிப்பவர்களுக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாகியுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளான எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங்கில் விதி விலக்கு அளிக்கப்பட்டும் அவர்களின் பாஸ்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழல் உள்ளது.

சீசன் களை கட்டி வரும் நிலையில் சீசன் நிலவரங்கள் பழைய குற்றாலத்தின் அடிப்படை வசதிகள் குறித்து செய்தி மற்றும் புகைப்படங்கள் எடுக்கச்செல்லும் செய்தியாளர்களிடமும் அடாவடியாக வசூல் செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளிடமும் செய்தியாளர்களிடமும் அடாவடி வசூல் செய்யும் நிலையில் சமானிய பொது மக்களிடம் இவர்களின் அடாவடி அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகமும் இதில் தலையிட்டு கார் பார்க்கிங் கட்டணத்தை உடனடியாக முறைப்படுத்த வேண்டுமெனவும் செய்தியாளர்களுக்குரிய உரிமையை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...