தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் திடீர் திருப்பம்!

ஜூன் 24, 2018 1225

சென்னை (24 ஜூன் 2018): டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பு கொடுத்தனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது சரியல்ல என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார். மாறுப்பட்ட தீர்ப்பால் வழக்கு விசாரணையை 3-வது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தகுந்த நீதி கிடைக்காது எனக் கூறி இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...