சென்னையில் பாஜக - பாமக வினரிடையே பயங்கர மோதல்!

ஜூன் 25, 2018 870

சென்னை (25 ஜூன் 2018): சென்னையில் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பாமக பேரணி சென்றபோது இருதரப்பாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

பாமக- பாஜக தொண்டர்கள் சென்னை தியாகராய சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக- பாமக மோதலின் போது சென்னை தியாகராய நகரில் இருந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பேரணியாக வந்த பாமக-வினர் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் குறித்து வெளியிட்ட பதிவு காரணமாக தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட சென்றதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...