திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய மூன்று பேர் கைது!

ஜூன் 25, 2018 564

திருச்சி (25 ஜூன் 2018): திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அதிகாலையிலும் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஆசியா விமானம் தரையிறங்கியது. சுங்கத்துறை அதிகாரிகளும், விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான 3 பேரின் உடமைகளை ஸ்கேனர் வைத்து சோதனை செய்ததில், ஸ்டெபிளைசர் எனும் மின்சாதன பொருட்களில் ஒரு கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், சென்னையை சேர்ந்த மகரூப், அமீன், அப்துல் சமது ஆகியோர் என தெரியவந்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...