ராமேஸ்வரத்தில் பரபரப்பு - விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுப்பு!

ஜூன் 26, 2018 505

ராமேஸ்வரம் (26 ஜூன் 2018): ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் கழிவு நீருக்காக பள்ளம் தோண்டும்போது ஆயுதங்கள் புதைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவு நீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டும் போது பணிகள் நேற்று நடைபெற்றன. அப்போது 3 அடி ஆழத்தில் தோண்டிய போது ஒரு இரும்புப் பெட்டி கிடைத்தது. இது புதையலாக இருக்கும் என சந்தேகித்த எடிசன் போலீஸாரிடம் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து ஆய்வு நடத்தினர்.

அதனை போலீசார் ஆய்வு செய்தபோது, இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 19 தோட்டா கொண்ட பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் மேலும் தோண்டியபோது 5 கண்ணி வெடிகள் பெட்டிகள், 15 கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர் தோட்டக்கள் 2 பெட்டிகள் என இருந்தன.

இங்கு கிடைத்திருக்கும் ஆயுதங்கள், தோட்டாக்கள் 35 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் அங்கு முகாம் அமைத்திருந்தபோது பதுக்கி வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அப்பகுதிகள் தோண்டப் பட்டு ஆயுதங்கள் உள்ளனவா? என ஆய்வு செய்யப் படுகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...