காயல் பட்டினத்தில் நகை பணம் திருடிய வேலைக்கார பெண் கைது!

June 26, 2018

காயல்பட்டினம் (26 ஜூன் 2018): காயல் பட்டினத்தில் 40 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

காயல்பட்டனத்தை சேர்ந்தவர் பாத்திமுத்து வயது 78. கணவனை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். வெளிநாட்டில் நகைக்கடை நடத்தி வருவதால், பாத்திமுத்து தனது சகோதரருடன் வசித்து வருகிறார்.

மேலும் வீட்டு வேலைகளை கவனிக்க அதே பகுதியை சேர்ந்த கதிஜா என்பவரை வேலைக்கு வைத்து கொண்டார். கதிஜாவுக்கு இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரை வேலை. தன் குடும்பத்தில் ஒருத்தியாக பாத்திமுத்துவும் கதிஜாவை கவனித்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை காணவில்லை என்று பாத்திமுத்து ஆறுமுகநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசாருக்கு வேலைக்கார பெண் கதீஜா மீது சந்தேகம் எழவே அவரை விசாரித்ததில் நகைகள் மற்றும் பணத்தை திருடியதை ஒத்துக் கொண்டார். இதனை அடுத்து கதீஜாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!