ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய காதலனை தீர்த்துக் கட்டிய காதலி!

June 26, 2018

வேளாங்கண்ணி (26 ஜூன் 2018): ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த காதலனை காதலியே கொலை செய்த விவகாரம் வேலாங்கண்ணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த அண்ணல் அக்ரஹாரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் நீலாவதியும், திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரியை சேர்ந்த விக்ரம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நீலாவதியை ஆபாசமாக எடுத்த வீடியோவை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த நீலாவதி, இது குறித்து தனது உறவினரான ராகுலிடம் கூறி விக்ரமை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக இருவரும் விக்ரமை, வேளாங்கண்ணி கடற்கரைக்கு அழைத்துள்ளனர். அது பற்றி அறியாமல் அங்கு சென்ற விக்ரமை, கடற்கரையில் வைத்து ராகுல் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே விக்ரம் துடிதுடித்து இறந்து போனார்.

விக்ரமின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள், கொலை செய்த நீலாவதியையும் ராகுலையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!