ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை - மூன்று பேர் கைது!

ஜூன் 27, 2018 625

திருப்பூர் (28 ஜூன் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்தது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ப. சிதம்பரம் மனைவியான நளினி சிதம்பரத்தின் தங்கை மருமகன் சிவமூர்த்தி. திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியில் பனியன் ஆலை நடத்தி வரும் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு செல்வதாக கூறி தனது வால்வோ காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் விமல், மணிபாரதி, கவுதமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...