மணல் மாஃபியா சேகர் ரெட்டி மீதான எஃப்.ஐ.ஆர்.ரத்து!

ஜூன் 27, 2018 422

சென்னை (28 ஜூன் 2018): மணல் மாஃபியா சேகர் ரெட்டி மீதான எஃப்.ஐ.ஆர் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுமார் ரூ.34 கோடி அளவிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள், 147 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் ரூ 34 கோடி ரூபாய் கைப்பற்ற சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்ட போது 2,3 வழக்கை ரத்து செய்யும்படி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சேகர் ரெட்டி மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேகர் ரெட்டி உட்பட ஐந்து மீது தொடரப்பட்டுள்ள 2,3 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் முதலில் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துளது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...