மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழி சாலை திட்டம் - அமைச்சர் அறிவிப்பு!

ஜூன் 27, 2018 1360

சென்னை (27 ஜூன் 2018): தமிழகத்தில் மதுரை - தஞ்சை இடையே 8 வழி சாலை திட்டம் அமைய உள்ளதாக நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை-சேலம் பசுமை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்க்கும் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு 8 வழிச்சாலை அமைக்க திட்டம் உள்ளதாக நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அடுத்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்' என்றும் கூறினார்.

மேல்லும் தி.மு.க. கொறடா சக்கரபாணி, “இனி நில எடுப்பின்போது தமிழகம் முழுவதும் இதேபோல் இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படுமா?” என்றார்.

அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும். ரோடு போடுவதற்காக மக்களை ரோட்டில் விடாது இந்த அரசு. சிலர், மக்களை மூளை சலவை செய்ய முயற்சி செய்கிறார்கள். அது பலனளிக்காது. அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...