உள்ளாட்சிக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை!

ஜூன் 28, 2018 494

சென்னை (28 ஜூன் 2018): உள்ளாட்சிக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை என்பதை உறுதி செய்து மேலும் 4 மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ‘வார்டுகளில் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது விதிகளுக்கு முரணாக உள்ளது’ என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்தது குறிப்பிடத்தகக்து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...