வைரமுத்து தலையை கேட்டவர்களை கைது செய்ய தைரியமற்றவர்கள் என்னை கைது செய்தனர்: மன்சூர் அலிகான்!

July 01, 2018

சேலம் (01 ஜூலை 2018): எட்டு வழிச் சாலைக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியான மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னை கைது "செய்ததற்காக சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 40 சதவீத கமி‌ஷனுக்காகவே இந்த 8 வழிச்சாலையை அமைக்கிறார்கள். 8 வழிச்சாலையால் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிறேன் என்றோ அல்லது எத்தகைய பசுமை புரட்சியை ஏற்படுத்த போகிறோம் என்றோ எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும்போதும் 4-வது சாலை எதற்காக அமைக்கிறார்கள்?. நான் கைது செய்யப்பட்ட அன்று, காலையில் ரத்ததானம் செய்யலாம் என புறப்பட்டேன். ஆனால், அன்றைய தினம் ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து என்னை கைது செய்தார்கள். வைரமுத்து தலையை வெட்டி கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்களை எல்லாம் கைது செய்யவில்லை. மன்சூர் அலிகான் இளிச்சவாயன் என்பதால் கைது செய்து விட்டார்கள்." என்றார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!