வாட்ஸ் அப் வதந்தியால் வந்த விபரீதம் - இரண்டு அப்பாவிகள் அடித்துக் கொலை!

ஜூலை 02, 2018 483

சென்னை (02 ஜூலை 2018): குழந்தைகளை கடத்துபவர்கள் என்று வதந்தி பரப்பியதன் விபரீதத்தால் இரண்டு அப்பாவிகள் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோவில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் இருவர் குறித்து குழந்தை கடத்துபவர்கள் என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதன் விளைவாக அவர்கள் இருவரும் பொதுமக்களால் சென்னையில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

இதேபோல மகாராஷ்டிர மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டியை மக்கள் அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...