BREAKING NEWS :பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை - சென்னையில் பரபரப்பு!

ஜூலை 03, 2018 806

சென்னை (03 ஜூலை 2018): சென்னையில் பிரபல ரவுடி ஆனந்தன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

பிரபல ரவுடி ஆனந்தன் (22) நேற்று, ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் இன்று இரவு, அடையாறு மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே கூட்டாளிகளுடன் ஆனந்தன் பதுங்கியிருந்தபோது அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மீண்டும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட ராஜவேலு முயன்றார் அப்போது போலீசார் ஆனந்தனை சுட்டனர். இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...