உனக்கு 18 வயசு ஆகல - மணப் பெண்ணை இழுத்து சென்றதால் விரக்த்தியில் மணமகன் தற்கொலை!

ஜூலை 04, 2018 777

மார்த்தாண்டம் (04 ஜூலை 2018): 18 வயது பூர்த்தி ஆகாததால் புது மணப் பெண்ணை அதிகாரிகள் மீட்டுச் சென்றதால் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு வயது 31. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கும், கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் முன்தினம் திருமணம் நடந்தது.

அன்று மாலையில், மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்நிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயது தான் ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் திருமண வீட்டுக்குள் நுழைந்தனர்.

சிறுமியிடம் அவர்கள் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர். மேலும் அவர் படிக்க ஆசைப் படுவதையும் அறிந்தனர். உடன் சிறுமியை மீட்ட அதிகாரிகள் நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். காப்பகத்திலேயே தங்கி பள்ளி படிப்பை சிறுமி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி தெரிவித்தனர்.

ஆனால் திருமணம் தடைபட்ட சம்பவத்தால் விரக்தி அடைந்த வினு அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...