குவைத்தில் இறந்த தமிழரை இந்தியா கொண்டு வர கலெக்டரிடம் மனு!

July 05, 2018

தஞ்சாவூர் (05 ஜூலை 2018): குவைத்தில் இறந்த தமிழரை இந்தியா கொண்டுவர உதவ வேண்டும் என தஞ்சை கலெக்டரிடம் இறந்தவர் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இஞ்சிக் கொல்லை அய்யனார் மேட்டுத் தெருவை சேர்ந்த கணபதி மனைவி இந்திராணி கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "என் மகன் ராஜாராமன் (27) கட்ந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி குவைத்தில் இறந்துவிட்டார். அவர் சமீபத்தில் திருமணம் முடிந்து மே 25ஆம் தேதி புறப்பட்டு சென்றார. இந்நிலையில் அவர் இறந்துள்ளார். அவரது உடலை ஊருக்கு கொண்டு வர உரிய உதவி செய்ய வேண்டும்." என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!