நீங்க என்ன சொன்னாலும் சரி தமிழகத்தில் அது நடக்கும்: தமிழிசை சொல்கிறார்!

July 05, 2018

சென்னை (05 ஜூலை 2018): தமிழகத்தில் தாமரை மலரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தமிழகத்தில் பிரதமர் மோடியை கம் பேக் மோடி என அழைக்கும் காலம் விரைவில் வரும். சட்டசபைக்கு ஸ்டாலின் கிழிந்த சட்டை அல்லது கறுப்பு சட்டையுடன் மட்டுமே செல்வார் எனவும், தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை மூடுவதே கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை எனவும் அவர் தெரிவித்தார்.

வரும் 9 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Search!