கல்லூரி பேராசிரியருக்கு பளார் விட்ட நடிகை!

ஜூலை 06, 2018 694

சென்னை (06 ஜூலை 2018): விமானத்தில் ஆபாசமாக படம் எடுத்த பேராசியரை நடிகை ஒருவர் சரமாரியாக தாகியுள்ளார்.

ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில் கல்லூரி பேராசிரியர் ஒருவரும் வந்துள்ளார். அதே விமானத்தில் சின்னத்திரை நடிகை ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் நடிகையை பேராசிரியர் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை கேட்டதற்கு பேராசிரியர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டார்.

பின்னர் சென்னை வந்ததும் இதுகுறித்து விமான நிலைய போலீசாரிடம் நடிகை புகார் அளித்துள்ளார். போலீசார் பேராசிரியரின் மொபைலை வாங்கி பரிசோதித்ததில் அதில் நடிகையின் படம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நடிகை பேராசிரிய கன்னத்தில் பளார் என்று அறை விட்டுள்ளார். பின்பு பேராசிரியரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...