நிர்வாண படத்தை வாட்ஸ் அப்பில் பரவ விட்டவர் எரித்துக் கொலை!

ஜூலை 07, 2018 794

திருச்சி (07 ஜூலை 2018): சக நண்பர்கள் நிர்வாணமாக குளிப்பதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்டவர் எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

சம்பவத்தன்று நாமக்கல் மாவட்டம் கொவசம்பட்டி கணபதி நகரை சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் சதிஷ் இவருடன் விமல் கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் ஆகியோரோடு மது அருந்தியிருக்கிறார். பிறகு மது போதையில் அருகிலுள்ள ஆற்றங்கரையில் இருட்டிய நேரம் என்பதால் உடையின்றி குளிக்கத்தொடங்கினர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் சதீஸ் தனது மொபைலில் சக நண்பர்கள் ஆடையின்றி குளிப்பதை புகைப்படம் எடுத்து வாட்ஸாப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட சக நண்பர்கள் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்றிய வாக்குவாதம் கைகலப்பில் முடிய ஆத்திரம் அடைந்த விமல், வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் ஆகியோர் சதீஷை சரமாரியாக அடித்து கத்தியால் குத்தி கொலைசெய்து 7 கிலோமீட்டர் தூரம் பைக்கில் சடலத்தை எடுத்துச்சென்று திருநாராயணபுரம் அருகே உள்ள ஒரு புதரில் வீசியெரிந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். இதுதொடர்பாக அந்த நால்வரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...