சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய இருவர் மீது வழக்குப் பதிவு!

ஜூலை 07, 2018 690

முத்துப்பேட்டை (07 ஜூலை 2018): ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய குவைத்தில் இருக்கும் இருவர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசுகையில் முத்துப்பேட்டை மீன் மார்கெட் நிலவரம் குறித்து பேசினார். இந்நிலையில் இதுகுறித்து வாரப் பத்திரிகையிலும் செய்தி வெளியாகிருந்தது. அதனை சுட்டிக்காட்டி முத்துப்பேட்டையை சேர்ந்த குவைத்தில் வசிக்கும் அப்துல் முத்தலிபு என்பவர் ஃபேஸ்புக்கில் பேசிய வீடியோ வைரலானது. அதேபோல அதற்கு பதிலளிக்கும் விதமாக அதே முத்துப் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து இவ்விருவர் மீதும் முத்துப் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவரையும் குவைத்திலிருந்து இந்தியா கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் இருவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...