18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

ஜூலை 08, 2018 750

சென்னை (08 ஜூலை 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியானது. டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்திருந்தார். ஆனால் மற்றோரு நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்திருந்தார். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக-விற்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக அவரை சிலர் மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி.சுந்தருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...