கோ பேக் அமித்ஷா - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!

ஜூலை 09, 2018 513

சென்னை (09 ஜூலை 2018): #Gobackmodi ஐ தொடர்ந்து #GobackAmitShah என்கிற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு வியூபம் வகுப்பதற்காக பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவரை தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். சென்னை, ஈச்சம்பாக்கத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் #GobackAmitShah என்று ட்ரெண்டாகி வருகிறது. இதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத போது மோடி சென்னை வந்த போது #GobackModi என இந்திய அளவில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...