ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடீர் திருப்பம்!

ஜூலை 10, 2018 835

தூத்துக்குடி (10 ஜூலை 20118): ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி மூன்று கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த மே 22-ல் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. ஆலைகளிலிருந்து மூலப் பொருள்களான அமிலங்கள், காஸ், டீசல், ஜிப்சம் ஆகியவையும் கடந்த 15 நாள்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த 1,900 நிரந்த பணியாளர்கள் 3,000 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுகமாக வேலை பெற்று வந்தவர்களும் வேலை இழந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆலையில் வேலை பார்த்தவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதேபோல் இன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...