தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் - நீதிமன்றம் அதிரடி!

ஜூலை 10, 2018 632

மதுரை (10 ஜூலை 2018): தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவில் நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும் எனவும், புதிய தரவரிசை பட்டியலை 2 வாரங்களுக்குள் வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கின் விசாரணை கடந்த 6 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது அ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...