அமித்ஷா வருகை குறித்து நம்ம தமிழிசை என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

ஜூலை 10, 2018 571

சென்னை (10 ஜூலை 2018): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் வரும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நாடாளு மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன. இந்நிலஈல் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். அவரின் தமிழக வருகை குறித்து, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகயில், பாஜக தலைவரின் வருகை கட்சியினர் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் பாஜக தற்போது வலுவாக இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகதான் வெற்றிபெறும்.
அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது. இந்த மழையால் தமிழக குளங்கள் நிரம்பும்.நீர் நிரம்பினால் தாமரை தானாக மலரும். இதனால் தமிழகம் பலனடையும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...