மீன்களில் ரசாயன கலப்பு - மீன்வளத் துறை அமைச்சர் விளக்கம்!

ஜூலை 10, 2018 521

சென்னை (10 ஜூலை 2018): மீன்களில் ரசாயனம் உள்ளதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மீ்ன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டை மற்றும், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஃபார்மலின் ரசாயனம் கலந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,, மீன்கள் பெறப்படும் இடத்தில் ஆய்வு செய்யப்பட்டே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வேகமாக வளரக்கூடிய மீன்களை வளர்த்து வாழ்வாதாரம் பொருளாதாரத்தை பெருக்க ஊக்குவிக்கப்படுவதாக கூறினார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலேயே துறைமுகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

ரசாயன கலப்பற்ற மீன்கள் விற்க்கப்படுவதை அரசு 100 சதவீதம் உறுதிப்படுத்தும். தரமான மீன்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களையும் சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஃபார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். என்றார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...