பழனி முருகன் சிலையை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க திட்டம்!

July 11, 2018

பழனி (11 ஜூலை 2018): பழனி முருகன் சிலையை போலீசிடம் ஒப்படைக்க பழனி கோவில் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஐம்பொன் சிலை முறைகேடு வழக்கில், ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் குருக்கள், கோவில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையியல் கோவில் லாக்கரில் உள்ள சிலையை கைப்பற்றி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான போலீசார் பழனி வந்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!