இதெல்லாம் தேவையா அமைச்சரே?

ஜூலை 11, 2018 550

சென்னை (11 ஜூலை 2018): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் குறித்து நல்ல விதமாகத்தான் பேசியிருப்பார் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவது குறித்து தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசும் போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது எனக் கூறினார்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், "அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார். தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மொழி மாற்றம் செய்து இருக்கிறார்., தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசினார்." என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...