பா.ரஞ்சித்துக்கு ராகுல் காந்தி புகழாரம்!

ஜூலை 11, 2018 581

புதுடெல்லி (11 ஜூலை 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியுள்ளார்.

நேற்று காலை சுமார் 2 மணிநேரம் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை பாராட்டிய ராகுல் கந்தி இச்சந்திப்பில் ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து உரையாடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதி, மதம் போன்ற பிரிவினைகளை ஒழிக்க காலா, கபாலி, மெட்ராஸ் மாதிரியான திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பா.ரஞ்சித், பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பேரறிவாளன் விடுதலையில் நாங்கள் ஒரு தடையாக இருக்கமாட்டோம் எனவும் தன்னால் முடிந்தவரை அவருக்கு உதவி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...