சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அச்சரம்பட்டியைச் சேர்ந்த வய் பேச முடியாத சிறுமியை அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மாணிக்கம் என்பவன் வன்புணர்ந்து கொலை செய்துள்ளான்.
முன்னதாக சிறுமியின் உடலை கைபற்றிய போலீசார் மோப்ப நாய் மூலம் குற்றவாளியை கண்டு பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நாய் மாணிக்கம் வீட்டுக்கு சென்றது. இதனை அடுத்து மாணிக்கத்தை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை மாணிக்கம் வன்புணர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.