பேராசிரியைக்கும் மாணவனுக்கும் தொடர்பு - உறுதி செய்த சிபிசிஐடி!

ஜூலை 11, 2018 1677

மதுரை (11 ஜூலை 2018): பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீசார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை அக்கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் வகையில் அமைந்த ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நிர்மலா தேவி கைது செய்யப் பட்டார். மேலும் அவரிடம் பல கட்ட விசாரணைகள் நடத்தப் பட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இடையே தொடர்பு இருந்ததை சிபிசிஐடி போலீஸ் உறுதி செய்துள்ளது. இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆதாரங்களை சிபிசிஐடி ஹைகோர்ட் கிளையில் சமர்ப்பித்துள்ளது. நிர்மலா தேவியுடன் கருப்பசாமிக்கு கூட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...