நடிகர் விஜய்க்கு புற்று நோய் வந்துவிடக் கூடாது என்று அப்படி சொன்னேன்: அன்புமணி!

ஜூலை 11, 2018 967

சென்னை (11 ஜூலை 2018): நடிகர் விஜய்க்கு புற்று நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சிகெரட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை நீக்கக் கோரினேன். என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

விஜய் நடிக்கும் ''சர்கார்'' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி, ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர் ஆகியோருக்கு போஸ்டரில் உள்ள புகைபிடிக்கும் காட்சியை நீக்கக்கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

இதனால் பாமகவினர் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகினர், இதுகுறித்து அன்புமணி விளக்கமளித்துள்ளார். அவர் இதுபற்றி இன்று செய்தியர்களை சந்தித்து பேசுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்ற போஸ்டரை நீக்கவேண்டும் என கூறியதற்கு அவருடைய ரசிகர்கள் புகைபிடிக்கக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, புகை பழக்கத்தால் விஜய்க்கு புற்றுநோய் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும்தான். அவர் நீண்ட காலம் வாழவேண்டும். எனக்கும் விஜய்க்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது அவருடைய நல்லதிற்காகவும் தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்." என கூறினார்,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...