கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவன் முஹம்மது யாசின்!

ஜூலை 11, 2018 877

ஈரோடு (11 ஜூலை 2018): ஈரோடு அருகே அரசுப் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவன் கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் பாஷா அஃப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முஹம்மது யாசின். இவர் சேமூர் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

சிறுவன் முகமது யாசின். பள்ளிக்கு சென்றபோது சாலையில் ஓரத்தில் பணம் கிடந்ததை பார்த்துள்ளார். உடனே அதனை எடுத்து பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைத்து சாலையோரம் கிடந்ததாக கூறியுள்ளார். ஆசிரியர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது அது ரூ 50 ஆயிரம் இருந்தது.

உடனே மாணவனுடன் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று பணத்தை பணத்தை காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் வசம் ஒப்படைத்தார். மாணவன் முஹம்மது யாசினின் இச்செயலை காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...