கமல் கட்சியின் துணைத் தலைவர் யார் தெரியுமா?

July 12, 2018

சென்னை (12 ஜூலை 2018): மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக முனைவர் கு.ஞானசம்மந்தம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. அங்கீகாரம் பெற்றபின், முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் கட்சி தலைவர் கமல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

முன்னதாக, கட்சியின் புதிய நிர்வாகிகளை கமல் அறிவித்தார். அப்போது, கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!